தன்னுணர்வு ஆற்றை எதிர்த்து நிற்கும் ஒற்றைப்பாறை அது அறிவதில்லை கொஞ்சி விளையாடும் நீர் அதன் ஊழை சமைப்பதை அதன் கால்களின் கீழ் நிலம் நழுவதை என்றோ ஒரு பெருவெள்ளம் ஏதோ ஒரு கண்ணி நகர்கையில் புரண்டு விழும் பாறை எப்போதும் கேட்கும் கேள்வியே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? விரி நீர் வையத்தின் வாழ்புனலில் பங்கேற்காத பாறையொன்று தப்பிக்கலாம் புரண்டு விழுவதிலிருந்து செவ்விச் செல்லும் நீரை தொடாத பாறைக்கேன் இருப்பு?
Posts
Showing posts from May, 2026